Showing posts with label Kurma Silver Kavach - A1396. Show all posts
Showing posts with label Kurma Silver Kavach - A1396. Show all posts

Kurma Silver Kavach - A1396

Kurma Silver Kavach - A1396
Product Code - A1396
In Silver Rs.2500/-
కూర్మ కవచం, கூர்ம டாலர், कूर्म कवच



In KURMA Avatar, Lord Vishnu incarnates himself as a tortoise. It is an interesting story involving both the gods (Devtas) and asuras (demons). In the ongoing saga of battle between the gods and asuras, on one occasion the gods suddenly lost all their strength due to a curse by the short-tempered sage Durvasa. The sage had once presented a garland of flowers to Indra,king of gods, who carelessly gave it away to his elephant which trampled it. 
The Devtas approached Vishnu for help. Vishnu then asked them to churn the ocean of milk after adding medicines into the ocean. Mt Mandara could be used a the churning stick he said. He requested them to ask them help of Asuras in lifting the mountain in exchange for offer of the share of nectar of immortality that would ensue from the churning. Both the devatas and the asuras churned the ocean using the serpent Vasuki as the rope. At the start, playing a Machiavellian trick, Indra, king of the gods asked the asuras for the head end of vasuki. But asuras suspecting foul play, took the head end, only to be deceived as the poison from Vasuki was slowly weakening them. But as churning was proceeding the mountain was sinking and then Lord Vishnu took the form of the tortoise KURMA and kept the mountain afloat. As soon as the bowl of amrita, the nectar of immortality was out, the asuras grabbed it. Then Lord Vishnu took the form of an apsara, a beautiful maiden, and seduced the asuras into letting her distribute the nectar and also to abide by her order of distribution. As soon as the devatas were served the maiden disappeared thus totally deceiving the asuras and making them totally weak.

భూమండలం మధ్యలో మేరు పర్వతం ఉంటుంది. దాని మీదనే స్వర్గలోకం ఉంటుంది. దాని పక్క నుంచి కిందగా పాతాళానికి బ్రహ్మదేవుడు ఒకమార్గాన్ని చేయించి దానిలో విశ్వకర్మ చేత బంగారురేకుతో తాపడం చేయించాడు. దానికి హిరణ్యగర్భ మార్గమని పేరు. దూతలు బలిచక్రవర్తి వద్దకు ఈ మార్గంలోనే వెళ్ళారు. ఈ భూమినంతటినీ తన వేయి శిరస్సులపై ఉంచుకొని మోస్తున్న వాసుకి క్షీరసాగర మథనానికి ఎలా రాగలడని బ్రహ్మ ఆలోచిస్తుండగా, విష్ణుమూర్తి ఆ ఆలోచనను గ్రహించి, వెంటనే తాను ఒక కూర్మం (తాబేలు) రూపాన్ని ధరించి, తన వీపున ఆ భూమిని మోయడానికి నిశ్చయించుకొని కూర్మావతారం ఎత్తాడు. ఆ విషయాన్ని వాసుకికి చెప్పి వెంటనే బయలుదేరాల్సిందిగా దూతలు వర్తమానాన్ని అందించారు. 

అలా ప్రపంచంలోని ప్రపంచంలోని సమస్త సమస్త చక్రవర్తులు, మునులు, రుషులు అంతా కూడా బ్రహ్మదూతల వర్తమానాన్ని అందుకొని అంతా వారి వారి సైన్యసమూహములతో బయలుదేరారు. సముద్రాన్ని మథించేందుకు కవ్వంగా మందర పర్వతాన్ని, దాన్ని చుట్టి తిప్పటానికి తాడుగా వాసుకిని దేవతలు సంకల్పించారు. మందర పర్వతం లక్షా యాభైవేల యోజనాల ఎత్తు, లక్ష యోజనాల వెడల్పు ఉండడంతో దాన్ని తీసుకురావడం ఓ సమస్య అయింది. వెంటనే వారంతా శ్రీమహావిష్ణువును ధ్యానించారు. కిందా మీదా పడుతూ ఆ పర్వతం కింద నలుగుతూ బాధపడుతున్న దేవతలను, రాక్షసులను శ్రీ మహావిష్ణువు ఆదుకున్నాడు. 

వెంటనే తన ఎడమచేతితో చిన్నపిల్ల లు గోళీకాయను తీసుకున్నంత తేలిగ్గా ఆ పర్వతాన్ని తీసుకు వెళ్ళి పాలసముద్రంలో పడ వేశాడు. వెంటనే అది సముద్రంలో మునిగిపో వడం ప్రారంభించింది. బ్రహ్మాది దేవతలంతా మళ్ళీ విచారంలో పడ్డారు. వారి భయాన్ని మాన్పి, వెంటనే శ్రీ మహావిష్ణువు ఎనిమిది లక్షల యోజనాల వైశాల్యంతోనూ లక్షా ముపె్పైవేల యోజనాల ఎత్తుతోనూ ఉన్న కూర్మరూపంగా అవతరించి ఆ పర్వతం కిందకు వెళ్ళి దానిని తన వీపు మీద ఉంచి, సముద్రం పైకి పర్వతం వచ్చేలా చేశాడు. ఆ తర్వాత వాసుకిని దానికి చుట్టి సముద్రాన్ని మథిస్తున్నప్పుడు గరళం, లక్ష్మీదేవి, అమృతం అలాంటి వాటితో పాటు అపార ధనరాశులు, నవనిధులు వెలువడ్డాయి. ఇలా స్వామి కూర్మావతారాన్ని ధరించి లోకోద్ధర ణకు సాయం చేశాడు. ఆయన అవతార లక్ష్యం అదే.



காவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாகப் போற்றப்படுவது கூர்ம (ஆமை) அவதாரம். மற்ற அவதாரங்கள் எல்லாம் தீயவர்களை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல் பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கத் துணை நின்ற அவதாரமாகும். 

தேவலோகத்துப் பெண்ணான சித்தவித்யாதர மகள் என்பவள் கலைமகள் கொடுத்த மலர் மாலையைத் தனது வீணையில் சுற்றிக் கொண்டு பிரம்ம லோகம் வழியாக வரும்போது, துர்வாச முனிவரைச் சந்தித்தாள். அவரை வணங்கிய அவள், தன்னிடமுள்ள மாலையை அவரிடம் கொடுத்தாள். மாலையைப் பெற்றுக் கொண்ட முனிவர், அந்த மாலையுடன் தேவலோகம் நோக்கிச் சென்றார். எதிரே தேவேந்திரன் யானைமீது அமர்ந்து வந்து கொண்டிருந்தான். அவனிடம் அந்த மலர் மாலையைக் கொடுத்தார் முனிவர். தேவேந்திரனோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி யானையின் தலையில் வைத்தான். யானையோ தன் துதிக்கையால் அந்த மாலையை எடுத்துக் கீழே போட்டு காலால் மிதித்தது.

இதனைக் கண்ட முனிவர் தன்னை அவமானப்படுத்திய தேவேந்திரனைப் பார்த்து, ""உன் செல்வமெல்லாம் இருக்கு மிடம் தெரியாமல் அழிந்து போகட்டும்'' என்று சாபமிட்டார். சாபம் உடனே பலித்தது. தேவேந்திரன் தன் செல்வம் அனைத்தையும் இழந்தான். யானை மதம்பிடித்து ஓடியது. இதனை அறிந்த அசுரர்கள் தேவேந்திரனின் கோட்டைக்குள் புகுந்து போர்புரியலானார்கள். போரில் அசுரர்கள் வீழ்ந்தாலும், அசுர குருவான சுக்ராச்சாரியாரின் சஞ்சீவி மந்திரத்தால் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார்கள். இதனைக் கண்ட தேவேந்திரன் பிரம்மன் தயவை நாடினான். பிரம்மன் மகா விஷ்ணுவிடம் தேவேந்திரனை அழைத்துச் சென்றார். தேவேந்திரனின் இக்கட்டான நிலையை அறிந்த மகாவிஷ்ணு, ""மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்னும் பெரிய நாகத்தைக் கயிறாக உபயோகித்து பாற்கடலைக் கடைந்தால் இழந்த செல்வத் தைப் பெறலாம்'' என்று சொன்னார். இவ்வளவு பெரிய செயலை தேவர்களைக் கொண்டு மட்டுமே செய்ய முடியாது என்றெண்ணிய தேவேந்திரன், அசுரர்களிடம் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு பாற்கடலைக் கடைய ஆரம்பித்தான்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்பொழுது மத்தாகப் பயன்படுத்தப் பட்ட மந்தரமலை ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் அசைந்து தொல்லை கொடுத்தது. இதனால் தன் எண்ணம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று கலங்கிய தேவேந்திரன் மீண்டும் மகாவிஷ்ணுவைச் சரண டைந்தான்.

தேவேந்திரனுக்கு உதவுவதற்காக மகாவிஷ்ணு பிரம்மாண்டமான ஆமையாக உருவெடுத்து, மந்தரமலையின் அடியில் சென்று அதைத் தாங்கினார்.

தேவர்களும் அசுரர்களும் மீண்டும் தங்கள் முயற்சியில் ஈடுபட்டார்கள். அப்போது கடையும் கயிறாக இருந்த வாசுகி என்னும் நாகம் பெரிதும் துன்பப் பட்டு விஷத்தைக் கக்கியது. அந்த விஷத்தின் வேகம் உலகத்தை அழித்துவிடும் என்பதால், நந்தியெம்பெருமானை அழைத்து அந்த ஆலகால விஷத்தைத் திரட்டி எடுத்து வரச் செய்து விழுங் கினார் சிவபெருமான். இதனைக் கண்ட பார்வதி சிவபெருமானின் கண்டத்தில் கை வைக்க, அந்த விஷம் கழுத்திலேயே தங்கிவிட்டது. அதனால் ஈசன் நீலகண்டன் ஆனார். விஷத்தின் தன்மை ஈசனை சிறிது நேரம் மயக்க நிலைக்குத் தள்ளியது. ஈசன் ஆலகால விஷத்தை விழுங்கிய திதி திரயோதசி திதி, மாலை நேரம் ஆகும். அதுவே பிரதோஷ காலமாயிற்று. மயங்கிய நிலையில் ஈசன் இருந்ததால் தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் ஈசனை வழிபட ஆரம்பித்தார்கள். அது போற்றுதற்குரிய பிரதோஷ வழிபாடாக அமைந்தது. மகா விஷ்ணுவின் கூர்ம அவதாரத்தால்தான் இத்தகைய உயரிய வழிபாட்டு முறை மக்களுக்குக் கிட்டியது என்று புராணம் கூறுகிறது.

இரண்டாவது முறையாகப் பாற் கடலைக் கடைந்தபோது முதலில் காம தேனு என்ற பசு வெளிப்பட்டது. இந்தப் பசு வேண்டியதைத் தரும் வல்லமை படைத்தது. இது பார்வதியிடம் சேர்ந்தது. அடுத்து பொன்மயமான ஒளியுடன் உச்சைசிரவஸ் என்ற குதிரை தோன்றியது. இந்தக் குதிரை பறக்கும் ஆற்றல் படைத்தது. அதற்கு அடுத்து ஐராவதம் என்ற நான்கு தந்தங்கள் கொண்ட வெள்ளை நிற யானை தோன்றியது. இது இந்திரனது வாகனம் ஆனது. இதனை அடுத்து ஐந்து மரங்கள் பாற்கடலிலிருந்து வெளிவந்தன. பஞ்ச தருக்கள் என்று சொல்லப்படும் அவை அரிசந்தனம், கற்பகம், சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் ஆகும். இவற்றில் கற்பக மரத்தின் கீழ் இந்திரன் அமர்ந்தான். கேட்பதைக் கொடுக்கும் சக்தி கொண்டது கற்பகம். அடுத்து கவுஸ்துபம் என்ற மணிமாலை தோன்றியது. இதனை அணிபவர்களுக்கு ஆற்றலையும் வெற்றியையும் தரக்கூடியது. இதனை திருமால் அணிந்தார். அதற்குப்பின் ஜேஷ்டாதேவி தோன்றினாள். இவளை மூதேவி என்றார்கள். (மூத்த தேவியே மூதேவி ஆனாள்.) இவளை யாரும் ஏற்காததால் பூலோகம் சென்றாள். 

இவளுக்கு அடுத்து மிக அழகான அறுபது கோடி தேவலோகப் பெண்கள் தோன்றினார்கள். இவர்களை தேவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அடுத்து தோன்றியது மது! இந்த மது தோன்றும் போது அதன் அதிதேவதையான சுராதேவியுடன் மதியை மயக்கும் அழகு மங்கையர் கணக்கற்ற தோழியர்களுடன் தோன்றினார்கள். அவர்களை அசுரர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்குப்பின் தோன்றியவள்தான் ஸ்ரீதேவி எனப்படும் மகாலட்சுமி. மலர் மாலையை ஏந்தியவளாய் அவதரித்த இவள் தனக்குத் தகுந்த மணாளன் மகாவிஷ்ணுவே என்பதனை அறிந்து, மகாவிஷ்ணுவிற்கு மாலை அணிவித்து திருமாலின் தேவியானாள். அடுத்து விஷக் கொடுமையை நீக்கும் மூலிகையுடன் சந்திரன் வெளிப்பட்டான். மேலும் அவன் கைகளில் நீலோத்பல மலர், மோக சாஸ்திரச் சுவடிகள் இருந்தன. அடுத்துத் தோன்றியது ஸ்யமந்தகமணி. இதனைச் சிந்தாமணி என்றும் சொல்வர். அதை சூரியன் ஏற்றான். கடைசியில் அவதரித்தவர் தன் வந்திரி. நான்கு கைகளுடன் அவதரித்த இவர் கைகளில் சீந்தில்கொடி, அட்டைப்பூச்சி, அமிர்த கலசம், கதாயுதம் தரித்திருந்தார். இவர் மருத்துவர்களின் தேவதை ஆனார்.

தன்வந்திரியின் கையிலிருந்த அமிர்த கலசத்தைப் பெறுவதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பலத்த போட்டி இருந்தது. இதனை அறிந்த திருமால் மோகினி அவதாரம் எடுத்து அமிர்தத்தைப் பங்கிட்டுத் தரும் வேளையில்தான் சில நிகழ்வுகள் நடந்தன. அசுரன் ஒருவன் குறுக்கு வழியில் சூரிய- சந்திரர்களுக்கு இடையில் அமிர்தம் பெற முயற்சிக்கையில், மோகினி யானவள் அமிர்தம் வழங்கிய சட்டுவத்தால் அவனை வெட்ட, அவன் இரண்டு துண்டுகளாகி ராகு- கேது ஆனான். அதற்குப் பின் மோகினியின் அழகில் ஈஸ்வரன் மயங்கியதால் ஸ்ரீஐயப் பன் அவதரித்தார்.

மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்ததன் விளைவால் பல அரிய பொருட்கள் கிடைத்தன. அதேசமயம் பல நிகழ்வுகளும் நடைபெற்றன. அனைத்தும் சுபமான நிகழ்வுகள் ஆகும்.

மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரக் கோலத்தினை வழிபட சனியின் தாக்கம் குறையும் என்பர்.


Total Pageviews

Flag Counter

Followers